பொதுமன்னிப்பு ஞானசார தேரருக்கு;

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை,  பெப்ரவரி 4 ஆம் திகதி, சுதந்திர தினம் வருவதால் அவரை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, பெவதிஹட அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை தெரிவித்துள்ளது.

நாட்டில் அவர் இனம், மதம் தொடர்பில் ஆற்றியுள்ள பங்களிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுக்குமாறு குறித்த அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நாரஹன்பிட்டி அப்யராம விகாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டுக்கு பாதகமாக கருத்தை தெரிவித்த விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு பதிலாக, கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கியுள்ளதாகவும், ஞானசாரரை விடுதலை செய்யாவிட்டால் எதிர்வரும் காலங்களில் பாரிய செயற்பாடுகளில் நடைபெறவுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: