தமிழ்லீடர்

பொருட்களை ஏற்றிச்சென்ற லொறி குடைசாய்ந்ததில்  சாரதி ஸ்தலத்திலே பலி!

கொழும்பிலிருந்து- தம்பலகாமம் ஊடாக மூதூர் பிரதேசத்துக்கு, பொருட்களை ஏற்றிச்சென்ற லொறி, தம்பலகாமம் கோணேஸ்வர கோயிலடிக்கு முன்னால், இன்று (15) அதிகாலை 4.00 மணியளவில் குடைசாய்ந்ததில் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லொறியின் டயார் ஒன்று வெடித்ததாலேயே, லொறி குடை சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், விபத்தில் மூதூர் ஆலீம் நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே  உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின்  சடலம் தம்பலகாமம் வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பலகாமம் பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.     

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: