தென்னிலங்கையில் தொடர்ச்சியாக பல பகுதிகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவதுடன் பலர் உயிரிழந்தும் உள்ளனர் இன்நிலையில் பொலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் தங்கல்ல பகுதியில் வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
தங்கல்ல பகுதியில் பொலிஸாரின் சமிஞ்ஞையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர் மேலும் (25) குடாவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய அப்பகுதி பூராகவும் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் நேற்று (26) அதிகாலை 1.30 மணியளவில் குடாவெல்ல சந்தியில் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டு இருந்தனர் இதன்போது அப்பகுதி வழியாக வந்த வேன் ஒன்றை பொலிஸார் நிறுத்த முற்பட்ட போது பொலிஸாரின் கட்டளையை மீறி குறித்த வேன் வேகமாக பயணித்துள்ளது.
இதனால் அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரினால் குறித்த வேன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இருப்பினும் குறித்த வேன் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add comment