தமிழ்லீடர்

பொலிஸார் நடத்திய அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய 2646 பேர் கைது!

காவற்துறை மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நேற்று முற்பகல் 6 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நாடு பூராகவும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 2646 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, ஹெரோயின் உள்ளிட்ட விஷ போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 1790 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 623 பேரும், வேறு குற்றங்கள் தொடர்பில் 101 பேரும், இதன் போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,
இந்த சுற்றிவளைப்பிற்காக 13 ஆயிரத்து 186 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.               

Add comment

Recent Posts

%d bloggers like this: