தமிழ்லீடர்

பொலிஸார் மூவரை விபத்துக்குள்ளாக்கிய லொரி சாரதி தப்பிச்சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – கச்சாய் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற லொரியொன்றை, பொலிஸார் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது, குறித்த லொரியின் சாரதி பொலிஸ் அதிகாரிகள் மூவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவமொன்று நேற்று  இரவு நடைபெற்றுள்ளது.

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாக கிடைத்த தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார், அங்கு மணல் ஏற்றப்பட்டு புறப்பட தயார் நிலையில் இருந்த லொரியை தடுத்து நிறுத்த முற்பட்ட போதே, லொரியின் சாரதி பொலிஸார் மூவரையும் விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் மூவரும் யாழ் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: