பொலிஸ் நிலையத்திற்குள் பெண்ணை கத்தியால் குத்திய நபர்!

வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற இடத்தில் பெண்ணின் மீது கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாகவும்,
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரிக்க அழைக்கப்பட்ட நபருடன் வந்த பெண்ணை, இன்னொரு நபர் கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நடந்த சம்பவத்தில், படுகாயமடைந்த பெண் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளரென, வென்னப்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வைக்கால பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் பணி செய்யும் ஜீ.யோகவாணி என்ற 40 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

கத்தி குத்தில் படுகாயமடைந்த பெண், அவருடன் இணைந்து வாழும் நபர் மற்றும் இன்னுமொரு நபருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதாகவும், முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடைபெற்ற போதே பெண் குத்தபட்டுள்ளார்.

அதேவேளை, இச்சம்பவத்தில் மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: