போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடணம்.

மாணவர்களின் மூலம் போதைப்பொருள் ஒழிப்பை  கற்றுக்கொள்வோம்’  என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களையும், பெற்றோர்களையும் இணைத்துக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசதத்தின் வழிகாட்டலின் கீழ், கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 21 முதல் 25 ஆம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி செயலகம் உட்பட அரச நிறுவனங்களும், இணைந்து  வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், இது தொடர்பாக கல்வி துறை சார்ந்த அதிகாரிகள், அதிபர்களை தெளிவு படுத்துவதற்கு, அனைத்து ஆலோசனைகளையும் கல்வி அமைச்சினால் வழங்கப்படவுள்ளதென, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பை வாழ்க்கையில் பழக்கமாக முன்னெடுக்க வேண்டும். போதைப்பொருளுக்கு மாணவர்கள் அடிமையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது சமூக சீர்கேடுகளுக்கு உந்து சக்தியாக அமையும். ஆகவே  மாணவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கின்றார்கள். ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்களை தெளிவூட்டுவது மட்டுமில்லை அதற்கான செயற்திறன்மிக்க வேலைத்திட்டங்களும், அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: