தமிழ்லீடர்

போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் துரிதம்!!!

ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் அரசின் அனைத்து சட்டத்தரணிகளுக்கும் போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்டு பாதுகாப்புப்பிரினரிடம் காணப்படும் போதைப்பொருளை அழிக்கும் நோக்குடன் இந்த அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் ஜனாதிபதி முன்னிலையில் கைப்பற்றப்பட்ட 769 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் களனி கோனவல பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இவை பகிரங்கமான நேற்றைய தினம் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2016,2017ஆம் ஆண்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 768 கிலோகிராம் 464 கிராம் கொக்கெய்ன் கொழும்பு மற்றும் கல்கிஸை பிரதம நீதிபதிகளின் பூரண கண்காணிப்பில் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: