தமிழ்லீடர்

போதைப் பொருள் எவர் பயன்படுத்துகின்றார்கள் என்பது சபாநாயகரிடம் கையளிப்பு!

கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல்களை சபாநாயகர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையளித்துள்ளதாக பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் செயற்படும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர் ஒருவரும் கொக்கைன் பயன்படுத்துபவர் வரிசையில் இருப்பதாகவும், நீர்கொழும்பு பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர், ஹம்பாந்தோட்டை மாவட்ட மாகாண சபை உறுப்பினரும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள் எனும் தகவல் கிடைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கொக்கைன் உள்ளிட்ட 11 வகையான போதைப்பொருட்கள் பயன்படுத்துகின்றார்களா? என்பது தொடர்பான இரத்த பரிசோதனையை மேற்கொள்ள 4200 ரூபாய் செலவாகிறதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர்  எதிர்வரும் நாட்களில் இந்த பரிசோதனையை மேற்கொண்டு அதற்குரிய அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: