தமிழ்லீடர்

‘பௌத்த கொடி ஏற்றப்படல் வேண்டும்’

எதிர்வரும் 5ஆம் திகதி
பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்பவுள்ளது. அன்றைய தினம் நாட்டிலுள்ள சகல பௌத்த நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை ஏற்றி கௌரவத்தை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2300 வருடங்களாக பௌத்த பிக்குகள் உள்ளடங்களாக இலங்கையின் பௌத்த மக்களால் போற்றி பாதுகாக்கப்படும் பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வைபவம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி மாத்தளை அலுவிஹாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழவுள்ளதாக  ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்துள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: