தமிழ்லீடர்

மகனின் இழப்பை தாங்க முடியாத தாய் தற்கொலை!!!

முல்லைத்தீவில் மகன் இறந்த சோகத்தில் தாயொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெறுள்ளது.

மேற்படி குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த கடந்த முறை க பொ த சாதாரண தர பரீடசையில் தோற்றிய மாணவனான யோகராசா துசியந்தன் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் 17.02.2019 அன்று யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழத்துள்ளார்.

மேலும் உயிரிழந்த மாணவனின் உடலம் 18.02.2019 அன்று அதிகாலை 2 மணிக்கு சிராட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு தாய் தந்தையரால் கொண்டு வரப்பட்டுள்ளது மகனது பிரிவை தாங்க முடியாத தாயார் 18.02.2019 அன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

எனினும் ஏற்கனவே ஒரு மக்களை பறிகொடுத்த தாய் தனது இரண்டாவது பிள்ளையையும் பறிகொடுத்த தாக்கத்தை தாங்க முடியாத யோகராசா சரஸ்வதி என்ற தாயாரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இந்த சம்பவத்தில் ஊரே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது விடயம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: