தமிழ்லீடர்

மகளை சித்திரவதைப் படுத்தி கொலை செய்த தந்தைக்கு மரணதண்டணை!

சித்திரவதைப் படுத்தி தனது மகளை கொலை செய்த தந்தைக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் இன்று தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மூன்றரை வயதான மகளை சித்திரவதைப் படுத்தி கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், குற்றவாளியாக காணப்பட்டதையடுத்து குறித்த நபருக்கு  இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, முறைப்பாட்டாளர்களுக்கு இயலுமாக இருந்ததாக வழக்கின் தீர்ப்பை அறிவித்த, வட மத்திய மகாண மேல்நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கொலை செய்த குற்றத்திற்கான தண்டனையாக பிரதிவாதிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாக மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தம்புத்தேகம, ஹூரிகஸ்வெவ சம்பத்கமவைச் சேர்ந்த காமினி என்றழைக்கப்படும் இங்குருவத்த கெதர சேனாரத்ன என்பவருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் ஹூரிகஸ்வெவ சுதர்ஷனகம சம்பத்கமவில் சதுனிக்கா உபேக்ஸா லக்மாலி என்ற சிறுமியை பல்வேறு சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்ததாக சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: