தமிழ்லீடர்

மகிந்த அமைச்சரவையில் இணைகிறேனா? – சிவசக்தி ஆனந்தன் மறுப்பு

ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் மகிந்த அமைச்சரவையில் இணையப் போவதாக  பகிரங்கமாகத்  தெரிவித்தார் என ஐபிசி தமிழ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் உண்மை இல்லை என்று சிவசக்தி ஆனந்தன் அவர்கள் சற்றுமுன் தமிழ்த் தேசிய வானொலிக்குத் தெரிவித்தார்.

 

இச் செய்தி தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் அவர்கள், ஐபிசி தமிழ் ஊடகத்தின் இச் செயலானது ஊடக அறத்துக்கு முரணானது என்றும் இது தொடர்பாக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.   இச் செய்தி தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை விரைவில்  வெளியிடுவேன் என்றார்.

 

இதே வேளை இச் செய்தி தொடர்பாக கருத்துத்  தெரிவித்த ஈபிஆர்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச் சந்திரன் அவர்களும் இச் செய்தியை மறுத்ததுடன்  மகிந்தவுடன் இணையமாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

Add comment

Recent Posts

%d bloggers like this: