தமிழ்லீடர்

மக்களின் ஆதரவை எதிர்பார்க்கும் மஹிந்த.

கண்டி, தலதா மாளிகையில் இன்று இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாவது,மக்களுக்கு இந்த மூன்று வருட அரசாங்கம் மீது வெறுப்பு வந்துவிட்டது. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றே நாம் செயற்பட்டோம் என குறிப்பிட்டார். 

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,

அதிகார பிரச்சினையால் இந்தப் பிரச்சினை வரவில்லை. ஆனால், இந்த பிரச்சினையில் நீதிமன்றம் மத்தியஸ்தம் வகித்தமையாலேயே சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இது பாரதூரமான நிலைமையாகும். எமது செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பல பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானமொன்றைக் கொண்டு வரவிருந்தேன்.

ஆனால், இந்தப் பிரச்சினையால் அனைத்துச் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. பிரதமர் யார்? என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார். அவருக்குத் தான் நிறைவேற்று அதிகாரம் காணப்படுகிறது. மேலும் ரணிலுக்கு பிரதமர் பதவி கொடுப்பதற்கு ஜே.வி.பி. ஆதரவளிக்குமா?என்பதை பார்க்க வேண்டும்.

இப்போது, நாம் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பார்த்துள்ளோம். உலகில் எந்தவொரு நீதிமன்றமும் இவ்வாறு இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்கவில்லை. இதற்கெதிராகவே நாம் மேன்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளோம்.

எனவே, மக்கள் எமக்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்பதுவே எனது கோரிக்கையாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: