தமிழ்லீடர்

மட்டக்களப்பிற்கு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை!

மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்கள் என்பன வழங்கிவைத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று காலை      நடைபெற்ற இந்த வைபவத்தில், காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான, அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சி.யோகேஸ்வரன், உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர்களையும் சேர்ந்த மக்கள் உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள நிரந்தரக் காணியற்ற மக்களுக்கு காணி வழங்கும் வகையில் 6109 காணி அனுமதிப்பத்திரங்களும், 1097 காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் மா. உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: