மட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது!

மட்டக்களப்பில் 16 வயது பாடசாலை மாணவன் ஒருவரை கஞ்சாவுடன் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாடசாலை ஒன்றின் முன்னால் வைத்து கைது செய்யப்பட்டு அவரிமிருந்து ஒரு மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, மட்டு தலைமையக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் புலனாய்வு பிரிவு பொலிஸார் நகர்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவனை பாடசாலைக்கு முன்னால் வைத்து கைது செய்ததுடன் அவரிமிருந்து ஒரு மில்லிக்கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மாமாங்க பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் இந்த வருடம் டிசம்பர் மாதம் கா.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளாரெனவும், அவருடைய வீட்டிற்கு அருகில் கஞ்சா வியாபாரி ஒருவரிடம் கஞ்சாவை பெற்று பாடசாலையில் கல்வி கற்றுவரும் தனது பாடசாலை நண்பர்களுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கஞ்சா பாவித்து வருவதாகவும், அவ்வாறே இன்றும் கஞ்சாவை பாடசாலைக்கு எடுத்து வந்துள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் போது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கைது செய்த மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: