தமிழ்லீடர்

மட்டக்களப்பில் சட்டவிரோத துப்பாக்கி மீட்பு!!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்திருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் விவசாயி ஒருவரை நேற்று புதன்கிழமை (13) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மாவடிவேம்பு 02 ம் பிரிவு கிராம சேவகர் வீதியிலுள்ள குறித்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விவசாயி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தொப்பிக்கலை குருக்கல்மடு பிரதேசத்தில் குறித்த துப்பாக்கியுடன் வயலில் இரவு நேரக் காவலில் ஈடுபட்டு விட்டு அதனை வீட்டிற்கு கொண்டுவந்த நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: