தமிழ்லீடர்

மட்டக்களப்பில் புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பில் இன்று அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே குறித்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

அத்துடன் குறித்த சடலமானது பொலிஸாரின் அனுமதியுடன் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.

மேற்படி  உயிரிழந்தவர்  அடையாளம்  தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு  பொலிஸார்  மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: