மட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்!!!

நாட்டிற்காக ஒன்றிணைவோம்செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு,மண்முனை  மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் பொதுமக்கள் கசிப்பு உற்பத்தி  நிலையங்கள் முற்றுகையிட்ட சம்பவம்  இன்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

மேற்படி மண்முனை மேற்கு பிரதேசசெயலாளர்  பிரிவுக்குட்பட்ட  பன்சேனை பகுதியில் உள்ள  காட்டு பகுதியிலேயே இந்த முற்றுகை  பொதுமக்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பன்சேனை கிராம  சேவையாளர் பகுதியில் உள்ள கண்டியன்குளம்,அடைச்சகல், நல்லதண்ணி,ஓடைக்குளம் ஆகிய  குளக்கரைகளின் அயலில் உள்ள பகுதிகளில்  உள்ள காட்டுப் பகுதியிலேயே இந்த கசிப்பு  உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பன்சேனைகிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மூன்று பகுதிகளிலும் சுமார்19 கசிப்பு  பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பரல்களை மண்முனைமேற்கு  பிரதேச செயலகத்தின் உதவிபிரதேச  செயலாளர் சுபா சதாகரனிடம் ஒப்படைத்தனர்.

எனவே ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டநாட்டிற்காக ஒன்றினைவோம்திட்டத்தின்  கீழ் முன்னெடுக்கப்பட்ட  போதையொழிப்பானது பன்சேனை பகுதியில்  பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட  விழிப்புணர்வு நடவடிக்கையினையடுத்தே  இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளதாக உதவி  பிரதேச செயலாளர் சுபா  சதாகரன் தெரிவித்தார்.

எனவே கைப்பற்றப்பட்ட கசிப்பு  பரல்களை கொக்கட்டிச்சோலை  பொலிஸாரிடம் ஒப்படைக்கும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உதவிபிரதேச  செயலாளர் சுபா சதாகரன் மேலும்தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: