மட்டக்களப்பில் 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் 8.5 ஏக்கர் காணிகள் இராணுத்தால் தேசிய நல்லிணக்க முறையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் துரித வழிகாட்டலில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வந்த பொதுமக்களின் காணிகள் நேற்று (27) பிற்பகல் 4.00 மணியளவில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதியால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களிடம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி கே.பி.ஏ.ஜெயசேகர,

மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.எஸ்.அபகுணவர்த்தன, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ.அனுர தர்மதாச, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ்,

மேலும் ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்த்தன, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், திணைக்களத்தலைவர்கள், மாவட்டத்திட்டப்பணிப்பாளர், உத்தியோகஸ்தர்கள், இராணுவத்தினர், உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்த கொண்டுள்ளார்கள்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான்குளம் , ஓந்தாச்சிமடம், கொக்கட்டிச்சோலை போன்ற இராணுவ முகாம் உள்ள பொதுமக்களின்  காணிகள் மற்றும் தோணிதாண்டமடு காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மகாவலி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: