தமிழ்லீடர்

மட்டக்களப்பு தாழங்குடா  பகுதியில் விபத்து; ஒருவர் பலி;

சற்று முன்னர் மட்டக்களப்பு,  தாழங்குடா (ஒல்லிக்குளம்)  மண்முனை பிரதான வீதி  வீதியில்  வடி சிறிய ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள்  செலுத்திச் சென்றவர் சம்பவம் நடந்த இடத்திலே, உயிரிழந்துள்ளாரென தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலையை  சேர்ந்த 44 வயதுடைய, எம்.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பிள்ளைகளின் படிப்பிற்காக கல்லடி, நாவற்குடாவில் வாசித்து வந்துள்ள இவர் கொக்கட்டிச்சோலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இவ்வாறு விபத்து நடைபெற்றுள்ளது.

அதேவேளை, சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும்,
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.                           

Add comment

Recent Posts

%d bloggers like this: