தமிழ்லீடர்

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு புதிய புகையிரத வண்டி தருமாறு கோரிக்கை.

 

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரத வண்டிகள் அனைத்தும் பழமைவாய்ந்த புகையிரத வண்டிகளாகவே உள்ளன. 

எனவே இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள புகையிரத வண்டிகளில் ஒன்றை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு வழங்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்டம் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பிரயாணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேற்படி மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரத வண்டிகள் அனைத்தும் ஏனைய புகையிரத நிலையங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரத வண்டிகளை விடவும் மிகவும் பழமைவாய்ந்த புகையிரத வண்டிகளாக காணப்படுகின்றது. இதனால் பல காலமாக சுகமான பிரயாணங்களை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

அத்துடன் அண்மைக்காலமாக  மட்டக்களப்பு கொழுப்பு சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புகையிரத வண்டியில் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட புகையிரதப் பெட்டியும் அகற்றப்பட்டுள்ளது. தற்பொழுது சாதாரண இருக்கையுடன் கூடிய பெட்டிகளுடனையே மேற்படி சேவையானது நடாத்தப்படுகின்றது. 

மேலும் மட்டக்களப்பு கொழும்பு பிரயாணம் என்பது மிகவும் அதிகூடிய தூரமாகும். மட்டக்களப்பினை பொறுத்தமட்டில் நாங்கள் இப் பிரயாணத்தினை பாதுகாப்பு கருதி புகையிரத்தின் ஊடாகவே மேற்கொள்ள விரும்புகின்றோம். ஆனால் அதற்கு சேவையில் ஈடபடுத்தப்பட்டுள்ள புகையிரத வண்டிகள் திருப்தியாற்றதாக உள்ளது.  

இதனால் நாங்கள் பிரயாணத்தின் போது பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். எனவே ஏனைய மாவட்டங்களில் வாழும் அரச உத்தியோகத்தர்கள்  தங்களது புகையிரத வரப்பிரசாதங்களை சுகமாக அனுபவிக்கும் போது மட்டக்களப்புவாழ் அரசஅதிகாரிகளுக்கு ஏன் அது எட்டாக்கனியாகவுள்ளது.

 

எனவே இலங்கையினை பொறுத்தளவில் மட்டக்களப்பு மாவட்ட புகையிரத நிலையத்திற்கு மாத்திரமே இவ்வாறானதோர் நிலைகாணப்படுகின்றது. இங்கு மாத்திரமே இதுவரை புதிய புகையிரத வண்டிகள்  வழங்கப்படாத நிலைகணப்படுகின்றது. இதனை புகையிர திணைக்கள அதிகாரிகள் மற்றும் அமைச்சர் ஏனைய மாவட்ட அரசியில்வாதிகள் அனைவரும் நன்கு அறிவார்கள். சேவை என்பது ஒரு நாட்டுக்குள் சமமானதாக வழங்கப்பட வேண்டும்.

எனவே இவ்வாறான நிலையினைக் கருத்திற் கொண்டு தற்போது இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் அதிநவீன வசதிகளுடன் கூடிய புகையிரத வண்டிகளில் ஒன்றினையாவது மட்டக்களப்பு மாவட்ட வாழ் மக்களின் நன்மைகருதி வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பிரயாணிகள் ஒன்றிணைந்து சம்மந்தப் பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: