தமிழ்லீடர்

மட்டக்களப்பு பொலிஸார் மீது தாக்குதல்  !

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி, நாவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது, நேற்று  தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், 24, 30 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மற்றும்  ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் ​குறித்துத் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் சம்பவம் காலை 10.30 மணிக்கு விசாரணை ஒன்றுக்காக  இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும்  சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மூவர், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பியோடியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நடத்திய தேடுதலில் இவ்விளைஞர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர் என்றும் இவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் பொலிஸார்  மேலும் தெரிவித்துள்ளளார்கள்.

இதேவேளை, தப்பியோடிய நபரைக் கைதுசெய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டு  வரும் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், சம்பவம் தொடர்பான  விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: