தமிழ்லீடர்

மட்டக்களப்பு பௌத்த மத்திய நிலையத்தில் இந்து ஆலயம்!

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலையத்தில் முருகன் பிள்ளையாருக்கான இந்து ஆலயத்தை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரையின் விகாராதிபதி பட்டபொல குணநந்த ஹிமியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இன நல்லிணக்கத்தினை எடுத்தக்காட்டும் வகையில் இந்து ஆலயம் ஒன்று அமைத்துத் தருமாறு விகாரைத்தரப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான ஆஞ்சநேயர்- சண்முகராஜாவின் நிதியுதவியில் இந்த ஆலயம் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆஞ்சநேயர் ஆலய பிரதம குரு சிவசிறி ஜெகதீஸ்வர சர்மா தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டுள்ள நிலையில், மட்டக்களப்பு பௌத்த விகாரையொன்றில் முதல் முறையாக இந்து ஆலயம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இந்த இந்து ஆலயத்தின் அமைப்புக்கான நிதியை மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான ஆஞ்சநேயர்- சண்முகராஜா வழங்கி வைத்துள்ளார்.                                     

Add comment

Recent Posts

%d bloggers like this: