மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையில் 11.3 சதவீத மக்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 11.3 சதவீதமானவர்கள் வறுமையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தால் நடத்தப்பட்ட சௌபாக்கிய விற்பனைக் கண்காட்சியை, நேற்று முந்தினம் பழைய கல்லடிப் பாலத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஏ.பாக்கியராஜா தலைமையில் நடத்தப்பட்ட வைபவத்தில் தொடர்ந்துரையாற்றுகையில்

இலங்கையைப் பொறுத்தவரைக்கும் 4.1 சதவீதமாக இருக்கும் வறுமை, 11.3 சதவீதம் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ளதை அவதானிக்க முடிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அவர்களது கடமையை மிகவும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார். வறுமையில் கஷ்டப்படுகின்ற மட்டக்களப்பு பிரதேசம் முதன்மையில் இருப்பதாவும் தெரிவித்தார்.

சமுர்த்தித் திட்டத்தை சரியாகச் செய்வதனூடாக வறுமையைக் குறைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நமது மாவட்டத்தில் உள்ள அபிவிருத்தி வருமானம் அதிகரிக்கின்ற அபிவிருத்தியாக சுற்றுலாத்துறையை மாற்றவேண்டும் எனவும் கல்லடிப்பாலத்தை இன்னும் அபிவிருத்தி செய்ய வேண்டும்  எனவும் மேற்படி விற்பனைக் கண்காட்சியை கல்லடிப் பாலத்தில் நடத்தத் தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: