தமிழ்லீடர்

மட்டக்களப்பு ஸ்டூடியோவுக்குள் புகுந்த பிக்கு;

மட்டக்களப்பிலுள்ள ஸ்டூடியோவுக்குள் நேற்று  காலை திடீரென உட்புகுந்த பிக்கு ஒருவர், உரத்துச் சத்தமிட்டு அட்டகாசம் செய்துள்ளார்.

ஸ்டூடியோவில் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த குழந்தையின் புகைப்படத்தைக் காட்டி, இது தனது சிறிய வயதுப் புகைப்படம் இதை நீங்கள் எவ்வாறு காட்சிப்படுத்த முடியுமென முரண்பட்ட அவர், அப்புகைப்படத்துக்கு விலை 125 ரூபாயா எனவும் கேள்வியெழுப்பி அட்டகாசம் செய்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் தான் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப் போவதாகவும் ஸ்டூடியோ ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளார்,
காவியுடை தரித்து வந்த நபர், உண்மையில் பிக்கு போன்று நடந்துகொள்வில்லையென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்திருந்த பொதுமக்களிடம் தான் மட்டக்களப்பைச் சுற்றிப்பார்க்க வந்துள்ளதாகத் தெரிவித்து விட்டு, பிக்கு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் ஸ்டூடியோ  ஊழியர்கள் பொலிஸ் அவசரப் பிரிவுக்கு, 119 இலக்கத்திற்கு  அறிவித்துள்ளனர். எனினும், பொலிஸார் அவ்விடத்துக்கு வருவதற்கு முன்னரே பிக்கு மேற்படி அட்டகாசம் புரிந்துவிட்டு, மட்டக்களப்பு ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளதாக, ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பின்னர் சம்பவ நடந்த இடத்துக்கு வந்த மட்டக்களப்பு பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.                                           

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: