தமிழ்லீடர்

மட்டு மாணவர்களுக்கு ஏற்றம் அறக்கட்டளையால் வழங்கப்பட்டது உதவிகள்.

ஏற்றம் அறக்கட்டளையால், அக்கினி சிறகுகள் பேரவை வேண்டுகோளுக்கு இணங்க ம/மே/பட்/வெல்லாவெளி விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 1,2,3,4,5 தரம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு54 புத்தகப் பைகள் 23/01/2019 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இதனை ஏற்றம் அறக்கட்டளையின் மட்டக்களப்பு இணைப்பாளர் திரு. பொ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏற்றத்தின் உறுப்பினர் திரு. பேரின்பராசா நிமலதீபன் அவர்களோடு அக்கினி சிறகுகள் பேரவையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும்  இந் நிகழ்வில்  பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் அத்துடன் பெற்றோர்கள் ,கிராமசேவகர்,அப்பிரதேசத்தின் கோயில் நிருவாக தலைவர் மற்றும் மகளிர் அணி குழுவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி இந் நிகழ்வின் போது ஏற்றம் அறக்கட்டளையின் மட்டக்களப்பு இணைப்பாளர் திரு.பொ.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்! ஏற்றம் அறக்கட்டளை அமைப்பானது இனிவரும் காலத்தில் இதைப் போன்ற பல வேலைத்திட்டங்களை  மட்டக்களப்பு பிரதேசத்தில் செய்யும் என கூறி  இந்நிகழ்வினை நிறைவு செய்தார்.

 

 

 

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: