தமிழ்லீடர்

 மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் த.வரதராஜன் அவர்களின் தலைமையில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.சத்தியகௌரி, பிரதேசசபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், சமூகசேவை உத்தியோகத்தர் ஆர்.கிருபராசா, சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சு.லில்லிமலர், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இ.சாணக்கியன் உட்பட அனைவரும் கலந்துகொண்டுள்ளார்கள்.

இதன்போது மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றது அவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.         

Add comment

Recent Posts

%d bloggers like this: