மதுஷுடன் கைதான இராஜதந்திரி யாரெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டுபாய் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷுடன் இருந்த இராஜதந்திர கடவுச்சீட்டுக்குரிய நபர் யாரெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடவுச்சீட்டுக்குரியவர், கம்புறுபிட்டிய பிரதேச சபை உறுப்பினரெனவும் கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளது.

அத்துடன், அவருடன் கைதான சிறைச்சாலைப் பாதுகாவலரும், கம்புறுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும், களுத்துறை சிறைச்சாலையில் சேவையில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்கு உள்ளான நிலையில், அங்கவீனமுற்றிருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.                             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: