தமிழ்லீடர்

மதுஷ் குற்றவாளியை பிடித்து எமது இறுதி கட்ட வெற்றியை அடைந்தோம்!-அமைச்சர் ரத்னாயக்க.

முன்னனி குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதுஷ் மற்றும் அவரின் சகாக்களை கைது செய்யும் பொருட்டு நீண்ட கால திட்டத்தின் இறுதி கட்ட வெற்றியென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

மேற்படி கொழும்பு துறைமுகத்தில் நேற்று(07) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்துரைக்கையில் அமைச்சர் ரத்னாயக்க கூறியதாவது, சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு மூலமாக பொலிஸ் சேவையின் சுயாதீனத்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளது. 

மேலும் நவீன பயிற்சிகள் மற்றும் அடிப்படை வசதிகளை முன்னேற்றியமையால் இத்திட்டத்தில் வெற்றிக்கொள்ள முடிந்தது.மூத்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர். லத்தீப் அவர்களின் வழிக்காட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்தீடிர் சோதனை பிரிவானது, திரு ரத்னாயக்க அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்த காலத்தில் நிறுவப்பட்டமை விசேடம்சமாகும். 

மேலும் பொலிஸ் விசேட அதிரடிப்படை , போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவு ஆகியன அமைச்சரினால் ஓர் பிரிவாக அறிவிக்கப்பட்டது.இப்பிரிவினை அமைக்கும் பொழுது இதற்கு உகந்த தலைவர் திரு லதீப் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். 

எனவே அவரை அப்பதவிக்கு தேர்ந்தெடுத்தோம். இவ்வாறன ஒரு குற்றவாளியை கைதுச்செய்வோம் என்ற நோக்கத்துடன் மிகவும் பொறுமையாக செயற்பட வேண்டுமென எமக்கு தெரியும்’ என அமைச்சர் ரத்னாயக்க தெரிவித்தார்.

மேலும் கருத்துரைத்து அமைச்சர் இப்பிரிவின் அதிகாரிகள் நீண்ட காலமாக மதுஷ் மற்றும் அவரின் சகாக்களை பின்தொடர்ந்தார்கள். எனினும் ஒவ்வொரு சந்தர்பத்தின் இறுதி தருவாயில் அவர்கள் பொலிஸ் வலையிலிருந்து தப்பித்தார்கள்.

‘ நாம் அரசாங்கத்தை அமைக்கும் போது பல ஆண்டுகளாக பொலிஸ் அதிகாரிகளிற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலும் பொலிஸ் துறை சிறப்பாக செயற்பட வேண்டுமாயின் அவ்வதிகாரிகளுக்கு கட்டயாமாக பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நாம் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கினோம். எம்முடைய இவ்வேலைதிட்டத்தின் பலாபலன்களை 2017ம் ஆண்டு இறுதியில் அனுபவிக்க முடிந்தது. விசேடமாக 2017ம் ஆண்டு டிசெம்பர் மாத இறுதிப்பகுதியில் நூற்றிற்கு 30%வீதம் வரையில் பொலிஸாரால் குறைக்க முடிந்ததென’ அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கீழ் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் , இன்னும் சில பிரிவுகள் மூலமாக இவ்வமைச்சினை பலப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளோமென தெரிவித்தார். துறைமுக அதிகார சபை என்பது திறைசேரி மீது தங்கும் நிறுவனமல்ல  என்பதை விசேடமாக குறிப்பிட வேண்டும். 

எனினும் துறைமுக அதிகார சபை தம்முடைய கொள்கலன்கள் செயற்பாடுகள் மூலமாக திறை சேரிக்கு வரி செலுத்துகின்றது. நாம் அரசாங்கத்தின் கொள்கைகளிற்கு மற்றும் அரசாங்க சலுகைகளுக்கு உட்பட்டுள்ளோம் என்றபோதிலும் அரசாங்கத்தின் கொள்கை வகுக்கும் பொழுது எம்முடைய கருத்துக்களையும் உள்வாக்கிக்கொள்ள வேண்டுமென’ அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: