மது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது!!!

புதுவருட பிறப்பினை முன்னிட்டு  இலங்கை முழுவதும் சுற்றிவளைப்பினால் மதுபோதையுடன்  வாகனம் செலுத்திய 245 சாரதிகள்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி பொலிஸாரால் நேற்று காலை 6 மணி  முதல் இன்று காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, மது போதையுடன் சாரதிகள்  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சுற்றிவளைப்பின் போது, 10,170 சாரதிகள் வீதி ஒழுங்குகளை  மீறிய குற்றச்சாட்டின் தொடர்பில்  வழக்குத் தொடரப்பட்டுள்ளது.மேலும் இச்சுற்றிவளைப்பானது எதிர்வரும் 22ஆம்திகதி  வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: