தமிழ்லீடர்

மன்னாரில் கேரள கஞ்சா பொதியுடன் இருவர் கைது.

மன்னார் பிரதான பாலத்தில் வைத்து, கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவரை, நேற்று  இரவு, கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நேற்று இரவு மன்னார் பிரதான பாலத்தின் ஊடாக வந்த ஹயஸ் ரக வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட போதே, சுமார் 2 கிலோ கிராம் கேரள கஞ்சாப்பொதி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.                                                                                                      இதன் போது, குறித்த வாகனத்தில் பயணித்த உடுகம மற்றும் ஜாஏல பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 47 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள், கேரள கஞ்சா பொதி வாகனம் என்பவற்றுடன் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியானதென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.                             

Add comment

Recent Posts

%d bloggers like this: