தமிழ்லீடர்

மன்னார் எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனை;

மன்னார் மனித எலும்புக்கூடு மாதிரிகள் காபன் பரிசோதனைக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக. மீட்பு  பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியின் மீட்பு பணிகள் கடந்த 10 நாட்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 122 ஆவது நாளாக மீட்பு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டள்ளது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
இன்றைய தினம் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யப்படவில்லை. மழை காரணமாக அகழ்வு செய்யப்படும் பகுதி பாதிப்படைந்துள்ளது. அவற்றை சீர் செய்த பின்னர் மீட்பு பணி இடம்பெறும் பகுதியைச் சுற்றி மறைப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று மன்னார் நீதவானுடன் கலந்துரையாடலின் பின் குறிப்பாக அகழ்வு பகுதிகளில் உள்ள வீதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன், மேலும் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு  இம்மாதம் மாதம் 30 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 280 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,
அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 சிறுவர்களின்  எலும்புக்கூடுகளாக இருக்கலாம் எனவும்   குறிப்பிட்டுள்ளார்.           

Add comment

Recent Posts

%d bloggers like this: