மன்னார் புதைகுழி பரிசோதனை அறிக்கை  வெள்ளிக்கிழமை வெளிவரும்!

மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி காபன் பரிசோதனை நடைபெற்றுள்ள நிலையில், குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) வெளிவருமென அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை (06) 139 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
குறித்த வளாகத்தில் இருந்து 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் 297 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் 26 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையதென அடையாளம் காணப்பட்ட நிலையில், பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி வெளிவருமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு கடந்த 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புளோரிடாவில் உள்ள ஆய்வுகூடத்தில் காபன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: