தமிழ்லீடர்

மன்னார் வங்காலை கடற்பகுதியில் இன்று கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளார்.

மன்னார் வங்காலை கடற்பகுதியில் இன்று அதிகாலை ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் நபர் ஒருவர் சிறிலங்கா கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யபட்டுள்ளார்.

பொதி செய்யபட்ட நிலையில் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது இந்நிலையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் அலவு 184கிலோ 200 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவுடன் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தகவல்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் வங்காலைப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன நிலையில் தற்காலத்தில் வடக்கு இலங்கையில் அதிகமான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: