மரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்!!! சோகத்தில் குடும்பத்தினர்!!!

மாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது.மேற்படி வவுணதீவு பொலிஸ்  பிரிவிற்குற்பட்ட குருந்தையடி முன்மாரி, காஞ்சிரங்குடா கிராமத்திலுள்ள மாமரமொன்றில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த நபரின் சடலம் அவரது வீட்டு  வளவிலுள்ள மாமரக் கிளையில் நேற்று காணப்பட்டதாகவும் பின்னர் பொலீஸாருக்கு  அறிவிக்கப்பட்டு பொலீஸாரின் முன்னிலையில்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் சடலமாக மீட்கப்பட்டவர்3 பிள்ளைகளின்  தந்தையான கதிர்காமத்தம்பி தருமலிங்கம்(வயது40) ஆவார்.எனவே உயிரிழந்தவரின் சடலம்  பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக  பொலிஸார் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: