தமிழ்லீடர்

மரி யமஷிட்டா இலங்கை விஜயம்.

இலங்கையின் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இலங்கை வந்துள்ள அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஜனாதிபதி, எதிர் கட்சித்தலைவர்  மற்றும் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மரி யமஷிட்டா நேபாளம், ஜப்பான், குரோஷியா மற்றும் அர்மோனியா உட்பட பல நடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவிகளை வகித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: