தமிழ்லீடர்

மருந்துப் பொருள்களுக்கான தட்டுப்பாட்டுக்கு மார்ச் மாத இறுதிக்குள் முழுமையான தீர்வு!

நாட்டில் நிலவும் மருந்துப் பொருள்களின் தட்டுப்பாட்டுகளுக்கு, எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் முழுமையான தீர்வு காணப்படுமென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

புற்று நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை, விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், எந்தவொரு மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லையெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 73 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்த அமைச்சர், மேலும் 27 மருந்துவகைகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: