மர்மமாக உயிரிழந்த இளைஞர்;

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர் தொடர்பான விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கும்புருகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

உயிரிழந்த இளைஞர் 23 வயதுடையவர் என்பதும், இவர் அரச மரக்கூட்டுதாபனத்தின் உறுப்பினர் என்பதும்,  தெரிய வந்துள்ளது.

குறித்த இளைஞர் நேற்று முன்தினம் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியில் சென்று, பின்னர் மீள வீடு திரும்பியுள்ளார், நேற்று (01) காலையில் அவரது அறையை பார்க்கும் போது  உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பது
தெரிய வந்துள்ளது.

இளைஞரின் மரணம் தொடர்பான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.                       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: