தமிழ்லீடர்

மழையுடன் கூடிய வானிலை தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில் அனைத்து இடங்களிளும் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் நிலையுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேவேளை இன்று மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் (mm) மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் கஜ புயலின் தாக்கத்தினால் 2,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பட்டுள்ளது.

நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுகையில் காற்று மற்றும் கடுமையான மழையின் காரணமாக 16 வீடுகள் முழுமையாகவும் 483 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றார்.

பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் உள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கான நிவாரணங்களை கிராம சேவையாளரின் தகவல்களுக்கு அமைய வழங்குமாறு வட மாகாண ஆளுநர்
ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: