மீண்டும் ரணில் அரசு உருவானால் அதற்குக் காரணம் நாங்களே! – மனோ கணேசன்.

 

எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் சவாலில் வெற்றி பெற்று மீண்டும் ரணில் அரசாங்கம் உருவானால் அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி மிகப் பிரதான பங்கு வகிக்கும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.

இன்று நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு, கண்டி, களுத்துறை, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மாவட்ட பேராளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் சிறுபான்மை கட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து, பதவி கொடுத்து வாங்க எவ்வளவு முயற்சிகள் நடந்தாலும் அதை நாம் பொறுமையுடன் சமாளிப்போம். மிகப்பெரும் பெரிய மனிதர்களே நேரடியாக பேசினார்கள் எனினும் நாம் விலைபோகவில்லை இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி மஹிந்த அணியில் உள்ளவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகும்.  ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள சிறுபான்மை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேரங்களை பேசி சலசலப்புகளை ஏற்படுத்த மாற்று அணி முயன்றாலும் தலைமைகளது நிர்வாகத்தால் அந்த முயற்சிகள் பிசுபிசுப்பு போயுள்ளன, மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறுவது என்பது வேறு,

ஆனால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சியை கலைத்து பிரதமரையும் அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்து தான் ஆட்சியை கைப்பற்றுவது முறைகேடான செயல் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இது நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்பட்டுள்ள சவால் என்றும் இதற்கு நாம் துணை போக முடியாது என்றும் தீர்மானமாக முடிவு செய்திருக்கிறோம். நமது பங்களிப்பு இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் பலவீனமடைந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: