தமிழ்லீடர்

மஹிந்தவுக்கு வாக்களிப்பாரா சம்பந்தன்? வெளியாகும் தகவல்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் யார் என்ற சர்ச்சை நிலவி வரும் இந்நேரத்திலேயே கூட்டமைப்பின் அணுகுமுறைகள் எவ்வாறு என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அரசியல் சாசனத்திற்கு அமைய நாட்டு மக்களின் இறைமையை பாதுகாக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட செயல்பாடுகள் இருக்கும் எனவும், ஜனநாயகத்திற்கு விரோதமாக எவரையும் வழிநடத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் கட்சி  உறுப்பினர்களிடையே பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளுக்கு பின்பாகவே முடிவுகள் எட்டப்படும் என்றும் தெரிவித்தார். சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அயல் நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடைய நிலைப்பாடுகள் தொடர்பிலும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

நாரதர்

Add comment

Recent Posts

%d bloggers like this: