விலைபோனார் வியாழேந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் மைத்திரி மகிந்த பக்கம் தாவி  அமைச்சுப் பதவி ஒன்றைப் பெற்றுக்கொண்டார்.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வியாழேந்திரன் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்றுக் காலை பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

 

கனடாவிலிருந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், நேரடியாக மஹிந்த ராஜபக்ச அணியை சந்தித்துள்ளார், மட்டக்களப்பை சேர்ந்த பாதிரியார் ஒருவரின் ஏற்பாட்டில், வாகனத்தில் மஹிந்த ராஜபக்சவிடம் அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

 

மகிந்த ராஜபக்ச உடனான பேச்சுவார்த்தை ‘சுமுகமாக’ முடிவுற்றதைத் தொடர்ந்து வியாழேந்திரன்  கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: