தமிழ்லீடர்

மஹிந்த பற்றி வெளிவந்துள்ள தகவல்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கும் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஒத்து வராது என கூறி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமனம் செய்தார். UNP New Prime Minister

ஆனால் மகிந்தவுக்கு பாராளுமன்றில் தேவையான பெரும்பான்மை அதரவு இல்லை. இதன் காரணமாக அரசியல் சிக்கல் நிலை உருவானது.

மகிந்த மீது இதுவரை 3 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட போதும் அவை எதையும் கவனத்தில் எடுக்காது அவர் பிரதமர் பதவியில் இன்னமும் உள்ளார்.

இதன் காரணமாக அவரின் பிரதமர் பதவியின் செல்லுபடி தன்மை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகிந்தவின் பிரதமர் பதவி அமைச்சரவை என்பவை மீது மேன்முறையீட்டு நீதிபதிகள் குழு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் காராணமாக புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜனாதிபதி மைத்திரி உள்ள போதும் , மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார்.

இந்நிலையில் இன்று கூடியுள்ள பாராளுமன்றில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் நம்பிக்கைப் பிரேரணை ஒன்று இன்றையதினம் நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த நம்பிக்கை பிரேரணையை சஜீத் பிரேமதாச அவர்கள் கையளிக்கவுள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க 12ம் திகதி பிரதமராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் ஐக்கிய தேசிய முன்னணியால் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: