தமிழ்லீடர்

மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு பிரதமர் பதவி இரத்து தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி விசாரனை.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அவருடைய பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்டரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை ரத்து செய்யக் கோரியும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவியை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் அதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தொடர்புண்டு என்றும் தகவல்கள் வெளியாகின. 

இதையடுத்து ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்திருந்தன.

அவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதென்றும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்டரீதியான உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டு, அவருடைய பதவியை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: