தமிழ்லீடர்

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்; பொலிஸார் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்;

எழு எதிர்ப்பு நடவடிக்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினரை கலைப்பதற்கு பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாராளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில்,
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அழகியற்கலை பல்கலைக்கழக முன்றலில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தால், கொழும்பு, வோர்ட் பிளேஸை அண்மித்த வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பேரணியாக பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் சென்று ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றஞ்சாட்டி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் மஹில் பண்டார தெஹிதெனிய கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

 

Add comment

Recent Posts

%d bloggers like this: