தமிழ்லீடர்

மாணவி ஒருவரை பாடசாலைக்கு சேர்க்க இலஞ்சம் பெற்ற அதிகாரி!

காலியிலுள்ள தேசிய பாடசாலை ஒன்றுக்கு மாணவி ஒருவரை சேர்த்துக்கொள்ள இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கல்வி அமைச்சின் அதிகாரி  உடன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மாணவி ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கல்வி கட்டமைப்பை இலஞ்சம் மற்றும் ஊழல்கள் இல்லாமல் மாற்றுவதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் படி மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட தகவல்களை பெறும் முறைமையின் ஊடாகவே இந்த தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர்கள் ஏமாற்றப்பட்டமை,  ஆசிரியர் இடமாற்றங்களின் போதான முறைகேடுகள் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: