தமிழ்லீடர்

மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பற்ற குறித்த கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

அன்னை சாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ள சிறுமியாவார்.

மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியின் தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர்.

எனினும் தாயின் உழைப்பிலேயே குடும்பத்தின் சீவியம் நடப்பதாகவும் உயிரிழந்த சிறுமியான டிலானி குடும்பத்தின் மூத்த பிள்ளை என்றும் தெரிவிக்கின்றனர்.

டிலானியின் இறுதிக் கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் குடும்ப வறுமை நிலை காணப்படுவதாக செய்தியாளர் கூறுகின்றார்.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: