தமிழ்லீடர்

மிக நீண்ட காலமாக குன்றும், குழியுமாக பெரிதும் சிதைவடைந்த நிலையிலும் காணப்பட்ட ஏறாவூர் தோம்பூதர் வீதி புனரமைக்கப்பட்டது.

மிக நீண்ட காலமாக குன்றும், குழியுமாக பெரிதும் சிதைவடைந்த நிலையிலும் காணப்பட்ட ஏறாவூர் தோம்பூதர் வீதியானது தற்போது இருபது இலட்சம் ரூபாய் செலவில் கொங்றீட் வீதியாக புனரமைப்பதற்காக நேற்றய தினம்  ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இவ் வீதிக்கான நிதியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் துரித கம்பெரலிய வேலைத்திட்டதினூடாக வழங்கிவைத்தார்.

மேலும் இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான சா.சுதாகராசா, ந,சுதாகரன் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்து சிறப்பித்தனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: