தமிழ்லீடர்

மின்னுயர்த்தியில் சிக்கி ஒருவர் பலி.

மருதானையில் அமைந்துள்ள பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்குரிய கட்டடமொன்றில், மின்னுயர்த்தியில் சிக்கிய நபரொருவரின் சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளன.

எனினும் உடனடியாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மின்னுயர்த்தியில் சிக்கிய நபர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணியின் போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 29ஆம் திகதி கொழும்பு- கொம்பனித்தெரு வீதியில் அமைந்துள்ள களியாட்ட விடுதியின் மின்னுயர்த்தி உடைந்து விழுந்ததில் ரகர் விளையாட்டு வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.         

Add comment

Recent Posts

%d bloggers like this: